Tuesday, 18 February 2014

சொத்துக்கு சொத்தாக.

சொத்துக்கு சொத்தாக –தமிழ்
சொந்தத்தின் வித்தாக.
பத்திரமே முத்திரையே—தமிழ்
பாசறையே கண்வளராய்.

நீரோடா ஆறை இங்கு--தமிழ்
யார் பாடக் கூடுமடா?
சீராளும் செந்தமிழா!—தமிழ்
ஊர் உன்னைப் பாடுமடா!

பாரதியும் தமிழ் வளர்த்தான்—தமிழ்
பசியிலே தான் மகிழ்ந்தான்.
ஊரவனைத் தேடவில்லை—தமிழ்
உலகம் இன்று பாடுதடா!

குறள் பாடிய வள்ளுவனோ—தமிழ்
கொடுக்கும் என்றும் பாடவில்லை.
ஊருலகம் அவன் புகழை—தமிழ்
ஓத நாளும் மறக்கவில்லை.`

ஔவை அந்தக் கிழவியவள்—தமிழ்
அழகி வாழுங் கன்னியவள்.
செவ்வைவழி காட்டித் தானே—தமிழ்   .
செழிக்கத் தான் சுழன்றாள்.

இலக்கியங்கள் செய்தோரை –தமிழ்
ஏற்றவில்லை உப்பரிகை.
விளங்க வாழ்ந்த வித்தகரை—தமிழ்
வெஞ்சாமரம் ஆற்றுதடா.  

என்னதரும் என்று எண்ணி—தமிழ்
எழுதுவது வியாபாரம்.
பின்னவரும் நலம் இயற்றி—தமிழ்
பிறவி நீயும் வாழ்வாயடா!

சொத்துக்கு சொத்தாக –தமிழ்
சொந்தத்தின் வித்தாக.
பத்திரமே முத்திரையே—தமிழ்
பாசறையே கண்வளராய்.

கொ.பெ.பி.அய்யா.



Monday, 17 February 2014

சொத்துக்கு சொத்தாக.

சொத்துக்கு சொத்தாக –தமிழ்
சொந்தத்தின் வித்தாக.
பத்திரமே முத்திரையே—தமிழ்
பாசறையே கண்வளராய்.

நீரோடா ஆறை இங்கு--தமிழ்
யார் பாடக் கூடுமடா?
சீராளும் செந்தமிழா!—தமிழ்
ஊர் உன்னைப் பாடுமடா!

பாரதியும் தமிழ் வளர்த்தான்—தமிழ்
பசியிலே தான் மகிழ்ந்தான்.
ஊரவனைத் தேடவில்லை—தமிழ்
உலகம் இன்று பாடுதடா!

குறள் பாடிய வள்ளுவனோ—தமிழ்
கொடுக்கும் என்றும் பாடவில்லை.
ஊருலகம் அவன் புகழை—தமிழ்
ஓத நாளும் மறக்கவில்லை.`

ஔவை அந்தக் கிழவியவள்—தமிழ்
அழகி வாழுங் கன்னியவள்.
செவ்வைவழி காட்டித் தானே—தமிழ்   .
செழிக்கத் தான் சுழன்றாள்.

இலக்கியங்கள் செய்தோரை –தமிழ்
ஏற்றவில்லை உப்பரிகை.
விளங்க வாழ்ந்த வித்தகரை—தமிழ்
வெஞ்சாமரம் ஆற்றுதடா.  

என்னதரும் என்று எண்ணி—தமிழ்
எழுதுவது வியாபாரம்.
பின்னவரும் நலம் இயற்றி—தமிழ்
பிறவி நீயும் வாழ்வாயடா!

சொத்துக்கு சொத்தாக –தமிழ்
சொந்தத்தின் வித்தாக.
பத்திரமே முத்திரையே—தமிழ்
பாசறையே கண்வளராய்.

கொ.பெ.பி.அய்யா.



தாலாட்டு

ஆராரோ ஆரிரரோ
அன்னக்கிளி கண்ணுறங்கு
ஊராரும் தூங்கிவிட்டார்
ஒருச்சாமம் ஆயிடுச்சு
உன்விழிகள் துஞ்சலியோ
உற்றதென்ன கண்மணியே.

கள்ளிப்பால் ஊட்டுவேனோ
கட்டித்தங்கம் ராசாத்தி!.
அள்ளிவீசிப் போடுவேனோ
அரசாள பிறந்தவளே!
காலம் கூடிக் கனியுதடி
கண்ணுறங்கு பொன் மகளே!.

பெண்ணாகப் பிறந்தோமென்று
பிஞ்சுக்கொடி கலங்காதே
கண்ணாலச் சந்தையெண்ணி
கவலைப்பட்டும் மயங்காதே
கல்விகற்று உயர்ந்துவிட்டால்
கால்தொழுவார் கண்ணுறங்கு!

வீரம்பெற்று பெண்களின்று
வித்தைகளும் கற்றுவிட்டார்
தீரமுற்றுப் பெண்களின்று
திசையெங்கும் வென்றுவிட்டார்..
பெண்ணடிமை  ஒழியுதம்மா
பெண்ணரசி கண்ணுறங்கு.

ஈழங்கூடி மலருதம்மா
இளந்தளிரே கண்ணுறங்கு!
நாளுங்கொடி உயருதம்மா
நன்மணியே கண்ணுறங்கு!
வேளையதும் வளருதம்மா
விடியட்டும் கண்ணுறங்கு!

சூலம் குத்தி ஆடுதம்மா
சூரத்தமிழ் கண்ணுறங்கு!
காலம் வென்று தேடுதம்மா
கரும்புலியே கண்ணுறங்கு!
பாலம் ஒன்றும் போடுதம்மா
ஈழம் கூடக் கண்ணுறங்கு!


கொ.பெ.பி.அய்யா.





எசப்பாட்டு எவடி?

அடி ஆரடி அவடிப் பொட்டப்புள்ள?
பொடி ஏனடிக் கூறடி மட்டப்புள்ள.!
கொடி நீயடி எங்கடி எட்டப்புள்ள?
வடிக் காட்டடி வாலடிக் கிட்டப்புள்ள.!

பாட்டுக்குப் பாட்டு எசப்பாட்டா?
பாடப் பாட நாங் கேட்டா.
மேட்டுக்கு மேடு ஏறுதடி
நாட்டத்தில் மனசு தேடுதடி.

குரலக் கேட்டாக் குமரியடி.
உருளுது புரளுது ஆசையடி.
வெடலப்புள்ள வேண்டான்டி.
வீணா நெஞ்சு அலையுதடி.

ஆசையும் ஊறிக் கூடுதடி
அதுவும் மீறிப் பாடுதடி.
பாட்டுக்குப் பாட்டுப் பாட்டாடி?
பழகுவதெப்போக் காட்டாடி.

ஏங்குது மனசு தாங்கலயே!
நோங்குற வயசு காங்கலயே!
தேங்குன தண்ணி ஒடையிதடி!
வீங்குது எண்ணிக் கடையுதடி!

கத்தாழங் காட்டுக்குள்ளே
சித்தாரக் கள்ளி எவா?
கொத்தோடு முள்ளுத்தச்சா
அத்தான் கண்ணும் நோகாதா?

வெடலைங்க ரெண்டுப் பேரடி.
கடலை போட்டாப் பாக்குமடி.
மடலுக்குப்பின்னே ஊரடி
மறைஞ்சுமிருந்தும் பேசுமடி.

வாடிக் கள்ளி முன்னாடி!
வரிசை அள்ளி வாரேன்டி.
சோடிப் பாக்கலாம் சரியாடி?
கூடிக்கலக்கலாம் முறையாடி.

சுடல மாடன் துணயிருப்பான்
உடல ஒளிச்சதும் போதுமடி.
உள்ளம் இசஞ்சிச் சேந்திருச்சி.
கள்ளம் மறஞ்சி துணிஞ்சிருச்சி.

கொ.பெ.பி.அய்யா.













Sunday, 16 February 2014

 இந்தியனே கண்ணுறங்கு

இன்னும் காலம் விடியவில்லை.
இந்தியனே கண்ணுறங்கு
இமயம் முதல் குமரி வரை
இந்தியாதான் கண்ணுறங்கு.

விழித்தாலே வேதனைகள்
விடியும்வரைக் கண்ணுறங்கு.
விழித்துகொண்டால் சாதனைகள்.
விளங்கும் வரை கண்ணுறங்கு.

இரவு கண்ட சுதந்திரமோ
இருண்டிருக்கு கண்ணுறங்கு.
இருளிலிலிங்கு உறவுகளோ
புரியவில்லை கண்ணுறங்கு.

சட்டம்கூடக் கண்ணைக்கட்டி
முட்டுதிங்கு கண்ணுறங்கு.
குற்றம் என்னும் கருப்புதானே
சுற்றுதிங்கு கண்ணுறங்கு.

சுமைகளையே சுமந்தலைந்து
சோர்ந்தவனே கண்ணுறங்கு.
அமைதியெனப் பொய்களிங்கு
அலைவதாலே கண்ணுறங்கு.

கொ.பெ.பி.அய்யா